நெடுஞ்சாலை பெயர்ப்பலகை சேதம் - வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலை பெயர்ப்பலகை சேதம் -  வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த பெயர் பலகை

மேல்மருவத்துார் பகுதியில் நெடுஞ்சாலை பெயர் பலகை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் வழிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேல்மருவத்துார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஊர் பெயருடன் கூடிய வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரின் துாரம் மற்றும் விபரங்கள் எழுதப்பட்டிருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு வழிகாட்டி பெயர் பலகைகளில் பாதி உடைந்து, ஊர் பெயர் தெரியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது.வைக்கப்பட்ட பல்வேறு வழிகாட்டி பெயர் பலகைகளில் பாதி உடைந்து, ஊர் பெயர் தெரியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது.

தற்போது வரை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அவற்றை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை பாதி சேதமடைந்துள்ளது. மேல்மருவத்துாருக்கு ஆன்மிக சுற்றுலா பயணியர் அதிகம் வரும் பகுதியில், வாகன ஓட்டிகள் எந்த ஊருக்கு, எந்த வழியாக செல்வது என, தெரியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் இருந்து செய்யூர், சூணாம்பேடு, கடப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும் சாலை பிரிந்து செல்கிறது.

சேதமடைந்து கிடக்கும் வழிகாட்டி பெயர் பலகையால், செல்லும் வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்துள்ள பெயர் பலகையை சீரமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story