ரூ.6 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
திருமலைப்பட்டியில் ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலையின் விரிவாக்கப்பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
சேந்தமங்கலம், டிச. 20 நாமக்கல் மாவட்டம் நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு அலகு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடி மதிப்பில் களங்காணி, திருமலைப்பட்டி சாலை, திருமலைப்பட்டி முதல் காளப்பநாயக்கன்பட்டி வரை 4.6 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை இடை வழித்தடத்தில் இருந்து, இருவழித்தடமாக அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் பணிகள் நடந்துள்ளது. இப்பணியை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு புதியதாக போடப்பட்ட சாலையின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை விரிவுப்படுத்தும் பணிகள், தரம் உயர்த்துதல், அரசு நிர்ணயம் செய்த காலத்திற்குள் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி, உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியின் போது உடனிருந்து கண்காணிக்க வேண்டும். ஆயிவின் போது கோட்டப்பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் உதவி கோட்டப்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.