குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு


குமாரபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்தனர்


குமாரபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்தனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்தனர். தமிழக முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு, ராசிபுரம், மல்லியகரை, ஈரோடு சாலைகள், மூன்று வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றிய பணிகள், குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலை இரு வழிச்சாலையிலிருந்து மூன்று வழிச்சாலையாக மாற்றம் செய்த பணிகள் குறித்து, சேலம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பவானி, குமாரபாளையம் பழைய மற்றும் புதிய காவேரி பாலங்களை ஆய்வு செய்து, அவைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சில பணிகள் குறித்து அறிவுறுத்தினார். திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர்கள் சையத் ரஹீம், மோகன்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story