இழப்பீட்டு தொகையை வேறு நபருக்கு அளித்த நெடுஞ்சாலைத்துறை
ஆட்சியரிடம் மனு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஸ்ரீதேவி நகர் பகுதியில் வசிப்பவர் ஜாய், இவர் அம்பத்தூர் பகுதியில் கபிலர் நகர் தெருவில் வசிக்கும் வாசுதேவன் என்பவரிடம் இருந்து ஸ்ரீ கணேஷ் நகரில் உள்ள மனைப்பிரிவு எண் 12.படி 1700 சதுர அடிமனை முறைப்படி திருவள்ளுவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2008.ஆம் ஆண்டுபத்திரம் பதிவு செய்யப்பட்டு முறையாக வாங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 1700 சதுர அடிக்கு பட்டா விண்ணப்பம் செய்து திருவள்ளூர் வட்டாட்சியர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு 153 என்ற பட்டா எண் வழங்கப்பட்டுள்ளது.முறைப்படி அனைத்து அரசு சான்றிதழ்களையும் பெற்ற நிலத்தின் வழியாக நெடுஞ்சாலை 205 திட்டத்தின் படி சாலை விரிவாக்கம் பணி தொடர்பாக 1700 சதுர அடி இடமும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது
இதனை அடுத்து நெடுஞ்சாலை துறையால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி நிலத்தின் உரிமையாளர் ஜாய் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நில எடுப்பு வருவாய் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித இழப்பீட்டுத் தொகையும் வழங்காததால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய மனுவில் தனி வட்டாட்சியர் இதற்கான தொகையை கடந்த 2012 ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவருக்கு காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார், அரசு நில இழப்பீட்டை ஆள் மாற்றி வழங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு அளிக்க வந்தனர். ஆனால் அரசின் வழிகாட்டுதலின் முறைப்படி கடந்த 2008 ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்து ஜாய் நிலத்தை முறைப்படி பதிவு செய்து தனது பெயரில் பட்டா பெற்ற நிலையில் தற்போது நிலத்தின் உரிமையாளர்க்குவழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிலம் விற்றவர்களுக்குவட்டாட்சியர் தவறுதலாக வழங்கி உள்ளதாகவும் நிலத்தின் உரிமையாளருக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம், ஜாய் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் இதுபோன்று பல பேருக்கு இழப்பீடு தொகை மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக பாதிக்கப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு கிடைக்க வேண்டியதொகையை பெற்றுத் தர வேண்டும் எனவும் ஜாயின் வழக்கறிஞர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.