மலைக்கோயில் முருகன் கோவில் அழகுப்படுத்தும் பணி!
விராலிமலைக்கோயில் முருகன் கோவிலில் லிப்டின் வெளிப்புற சுவற்றை அழகுப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
மலைக்கோயில் முருகன் கோவிலில் லிப்டின் வெளிப்புற சுவற்றை அழகுப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
விராலிமலையில் முருகன் மலைக்கோயிலில் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள மின்தூக்கியின் (லிப்ட்) வெளிப்புறச் சுற்றுச்சுவரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விராலிமலையில் அமைந்துள்ள 207 படிகள் கொண்ட முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகும். கோயிலுக்கு படிகள் வழியாக சென்று வந்த நிலையில், மலை அடிவாரத்திலிருந்து மலை மேல் உள்ள இடும்பர் கோயில் சந்நிதி வரை 2021-இல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை முடியும் இடத்திலுள்ள வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதன் வெளிப்புறச் சுற்றுச்சுவரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சுவரில் தனியார் பங்களிப்புடன் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன், மலைக்கோயில் படங் வரையப்பட்டு வருகின்றன.வண்ணம் தீட்டு பணிகள் நடைபெற்று பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.
Next Story