ரிஷிவந்தியத்தில் இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்

ரிஷிவந்தியத்தில் இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்
முகாம்
ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுாரில் இந்து முன்னணி சார்பில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் சிவாஜி,புதுச்சேரி மாநில தலைவர் குமார், மாநிலச் செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினர். முகாமில், யோகா, விளையாட்டு, கராத்தே உள்ளிட்ட உடற் பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டு, அதை தினமும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story