சிவன் கோவில் மைதானத்தை சீர் செய்ய இந்து முன்னணி கோரிக்கை

சிவன் கோவில் மைதானத்தை சீர் செய்ய இந்து முன்னணி கோரிக்கை
X

குப்பை தேக்கம்

தூத்துக்குடியில் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிவன் கோவில் மைதானத்தை சீர் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடியில் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிவன் கோவில் மைதானத்தை சீர் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி ராமேஸ்வரம் ரோடு, பொன்னகரம் ரவுண்டானா பகுதியில் உள்ளது பாரி வேட்டை மைதானம்.

சிவன் கோவிலுக்கு சொந்தமான அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் குப்பைகள், கழிவுகள் அனைத்தையும் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.

இதனால் பாரிவேட்டை மைதானம் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றத்தையும் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த இடத்தின் அருகில் தான் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகமும் உள்ளது.

இந்த நிர்வாகத்திற்கு தேர்வு தான் மாநகராட்சி விடத்தில் குப்பையை கொட்டுகிறதா? இந்த இடத்தில் குப்பையை கொட்ட அனுமதித்த அதிகாரி யார்? என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை சீர் செய்ய இந்து முன்னணி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இதனை சுத்தம் செய்து பாரிவேட்டை மைதானத்தை ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து மீட்டு தற்போது சுத்தமான மைதானமாக வைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்விடத்தை குப்பை மேடாக மாநகராட்சி நிர்வாகமே மாற்றுவது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயகரமான குப்பை கழிவுகளை இவ்விடத்திலிருந்து அகற்றி அவ்விடத்திற்கு வேலை அமைத்து சிவன் கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story