இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்து முன்னணி  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்  

தொளசம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது
சேலம் மாவட்டம், தொளசம்பட்டி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து முன்னணி பெரியேரிப்பட்டி ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்குக் கிளை கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story