போலீசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

போலீசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இரணியலில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட காவல் துறையினரை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இரணியலில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட காவல் துறையினரை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சேனம் விளையை சேர்ந்தவர் உதயகுமார் (53) மெக்கானிக். இவருடைய மனைவி ஜகாராணி வெள்ளிச்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் இரணியல் அருகே அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திதரன் மகன் சபரி கிரிஷ் (26) என்பவர் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு உள்ளது. சம்பவ தினம் இரவு உதயகுமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை சபரிகிரிஷ் தடுத்து நிறுத்தி தகராறு செய்து கல்லால் தலையில் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த உதயகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு செய்து சபரி கிரிஷை கைது செய்தனர். இதற்கு இடையே சபரிகிரிஷ் தனது வீட்டின் அருகே சுடலைமாடன் கோவில் வைத்து வழிபாடு செய்வதாகவும், உதயகுமார் சாமி சிலைகளை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட தகராறில் அவர் காயம் அடைந்ததாகவும், இந்து முன்னணி குற்றம் சாட்டினார்.

மேலும் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் ஒருதலைபட்சமாக சபரிகிரிஷ் கைது செய்ததாலும் போலீசாரை கண்டித்து நேற்று இரணியல் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். இதற்கு இடையே அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 2 பெண்கள் உட்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story