இந்து பிரமுகர் கொலை வழக்கு: காங்., நிர்வாகி உட்பட 5 பேர் கைது
கைது
பூந்தமல்லி அடுத்த மாங்காடு, அம்பாள் நகரில் வசிப்பவர் ராஜாஜி, 45; ஹிந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவர். குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் வைத்து, ராஜாஜியை நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர், வெட்டி கொலை செய்து தப்பினார்.
பூந்தமல்லி போலீசார் விசாரணையில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 34, என்பவர் கொலையாளி என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.
பூந்தமல்லியை சேர்ந்த காங்., பிரமுகர் கோபால் துாண்டுதலில், அவரை கொன்றதாக, கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இதையடுத்து, கிருஷ்ணகுமார், 34, கோபால், 60, சம்பத், 45, சந்தோஷ், 32, ராஜேஷ், 32, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது: பூ
ந்தமல்லியைச் சேர்ந்தவர் கோபால், 60; திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர். இவரது மனைவி கவுரி, கோபாலை பிரிந்து ராஜாஜியுடன் வாழ்ந்து வந்தார். கவுரியை தன் மனைவி எனக்கூறி, கவுரியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை,
ராஜாஜி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் கவுரி இறந்தார். இதையடுத்து ராஜாஜி, 'கவுரி' பெயரில் அறக்கட்டளை துவங்கினார். இதனால், ராஜாஜியை பழிவாங்க கோபால் காத்திருந்தார். இந்த நிலையில், ராஜாஜிக்கும் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாருக்கும் முன்விரோதம் இருப்பதை கோபால் அறிந்துள்ளார். இ
தையடுத்து, கோபால் துண்டுதலின்படி, கிருஷ்ணகுமார் ராஜாஜி வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.