தென்காசி ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு

தென்காசி ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு
தென்காசி ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட இந்து முன்னணியினர் மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - குற்றாலத்தில் பழைய குற்றாலம் அருவி, மெயின் அருவி, குழந்தைகளை கவரும் புலிஅருவி, பெண்கள் பாதுகாப்பாக குளிக்கும் சிற்றருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேன் அருவி ஆகியவை உள்ளன.

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என தகவல் பரவுகிறது. ஏற்கெனவே நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும், களக்காடு நம்பி கோயிலுக்கும், குற்றாலத்தில் உள்ள செண்ப காதேவி அம்பாள் கோயிலுக்கும் பக்தர்கள் இறை வழிபாட்டுக்கு செல்வது குதிரை கொம்பாக உள்ளது. இவை எல்லாம் இதற்கு முன்னால் சுதந்திரமாக தனிமனித வழிபாட்டில் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருந்தது.

ஆனால் வனத்துறை நிர்வாகத்தால் தனிமனித இறை வழிபாடு தடுக்கப்படு கிறது. அதேபோல் தற்போது குற்றாலம் அருவிகள் முழுவதும் வனத்துறை நிர்வாகத்திற்கு சென்றால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கருவிகளுக்கு செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். இயற்கையின் வரமாக திகழும் அருவிகளில் குளிக்க கட்டணம் வசூல் செய்வார்கள். எனவே குற்றாலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Tags

Next Story