இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு

எழுச்சி மாநாடு
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை காரியாலயத்தில் வார வழிபாடு நடைபெற்றது. இந்த வார வழிபாடு நிகழ்ச்சி நாகராஜ் தேனிநகர துணைத்தலைவர் தலைமையிலும் P.ரத்தினம் மாவட்டசெயற்குழு முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் நடக்கும் இறுதி யுத்தம் என்பதாலும் இந்த தேர்தல் முடிவுகளும் அதன் பயனாக அமையும் ஆட்சியின் மூலமாக மட்டுமே அகண்ட பாரதமும் பூரண இந்து ராஷ்டிரமும் அமைக்க முடியும் என்பதால் பக்தி நிரம்பிய தமிழக மக்கள் வாக்குச்சீட்டு என்ற சக்தியின் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரைக்கு தங்களது வாக்குகளை செலுத்தி தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தமிழக தேர்தல் ஆணையம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத சிறப்பு நிகழ்வுகளில் அரசியல் கட்சியினர் கலந்து கொள்ளலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது என சொல்லி இருப்பது வரவேற்க கூடியது அதேபோல இது இந்துக்களின் பண்டிகை மாதம் என்பதால் இந்து திருவிழாக்களை தேர்தல் காரணம் காட்டி முடக்க நினைக்கக் கூடாது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளதாலும் வயதானவர்கள் நோயாளிகள் சிறுவர் சிறுமிகள் போன்றோர்கள் பொது வெளியில் பயணிக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிழற்குடைகள் அதிக அளவில் அமைப்பதோடு தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
