வரலாறு மறைக்கப்படுகிறது - சீமான்

வரலாறு மறைக்கப்படுகிறது - சீமான்

 வரலாறு, அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருவதாக சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். 

வரலாறு, அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருவதாக சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசியதாவது:

வீர போர் புரிந்த வேலு நாச்சியார் மண்ணில் இருந்து அவர் வாழ்ந்த அரண்மனை முன்பு நின் றுஉங்களை சந்திக்கின்றேன். வரலாறு அடையாளக் குறிகள் மறைக்கப்படுகிறது. வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டதற்கான சான்று வேலு நாச்சியாரின் சிலைகள் இல்லை. வரலாற்றை மறைத்த இனமும் வேரை இழந்த மரமும் வாழாது என்பது உண்மை. ஒரு நாள் இந்த நிலத்தை கைப்பற்றி ஆளத் தொடங்கும் வேலு நாச்சியாரின் மாபெரும் சிலையை நிறுவுவோம் என்றார்.

மேலும் நினைவிடங்கள் வீரக்குறியீடுகள் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தை விட்டு விட்டு அடிமைப்பட்டு கிடக்கிறோம். மருது சகோதரர்களுக்கு மிகப்பெரிய வெண்கல சிலையை நிறுவுவேன். முல்லைக்கொடிக்கு தேரை கொடுத்துச் சென்ற பாரி ஆண்ட பிரான்மலை சொந்த நிலங்களை கல்குவாரிகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாம் வென்று பரம்பு மலையை பாதுகாப்போம். பேராபத்தை தருகின்ற மின் உற்பத்தி நிலையங்களை அணு உலை அனல் மின்சாரம் பழுப்பு நிலக்கரி இவையெல்லாம் அரசு வைத்துக் கொண்டு 66 ஏக்கரை ஆக்கிரமித்து நமது வளங்களை எடுத்து எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கிறார்கள். மின்சாரத்தை எல்லோரும் பிரித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரவர் நீர் வளம் அவர்களுக்கு மட்டுமே என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். சீமானை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிறார்கள் . நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, வளர்ச்சி என்ற பெயரில் எங்களை வீழ்ச்சி அடைய வைப்பதற்கு எதிரானவர்கள். மின்சாரத்தை மாற்று வழியிலே தயாரிக்கலாம் என்பதை கூறுகிறோம். நிலக்கரி தீர்ந்து விடக் கூடிய வளம் ஏன் நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். ஆனால் காற்றுக்கு, நீருக்கு, நிலத்திற்கு எந்த பாதிப்பும் வராத காற்றாலை மின்சாரம் சூரிய ஒளியில் மின்சாரத்தை தயாரிக்கலாம் அல்லது விளைச்சலுக்கு பயன்படாத நிலங்களையாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

Tags

Next Story