அதிநவீன இயந்திரத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அதி நவீன சிகிச்சை பிரிவு துவக்கம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அதிநவீன மானிட்டர் வசதியுடன் கூடிய ஹீமோடயாலிசிஸ் சிகிச்சை பிரிவை சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பானுமதி குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை துவக்கி வைத்தார்.மேலும் 18 லட்சம் மதிப்பில் அதிநவீன மானிட்டருடன் கூடிய 2 இயந்திரங்கள் கொண்ட டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு இந்த அரசு மருத்துவமனையில் 12 மாதம் நோயாளிகளுக்கு இலவசமாக அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெரும் வகையில் உள்ளது.எனவும் இந்த பிரிவில் நோயாளிகள் அதிகமாக வரும் பட்சத்தில் மேலும் கூடுதலாக ஒரு இயந்திரம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான நோயாளிகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை குடிமை மருத்துவர் திருமாவளவன், டயாலிசிஸ் சிறப்பு மருத்துவர் முருகவேல், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
