பலவகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு HIV குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பலவகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு HIV குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பலவகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு HIV குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் செயல்படும், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பாக மாணவர்களுக்கு எச்ஐவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினிதா, மாணவர்களுக்கு எச்ஐவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
Next Story