உணவு பொருள் பதுக்கல் : புகார் தர தொலைபேசி எண் அறிவிப்பு

உணவு பொருள் பதுக்கல் :  புகார் தர தொலைபேசி எண் அறிவிப்பு

புகார் எண்கள் 

தஞ்சாவூரில் உணவு பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண் தொடர்பாக சுவரொட்டிகள் மூலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின்படி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அறிவுரையின் பேரில், தஞ்சை மாவட்டத்தில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டண மில்லா தொலைபேசி எண் 18005995950 அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் பிரசன்னா மற்றும் காவல்துறையினர். பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் கட்டணமில்லா தொலை பேசி எண்ணின் சுவரொட்டியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story