அச்சன்கோவில் தா்மசாஸ்தா கோயிலில் கொடியேற்றம்

அச்சன்கோவில் தா்மசாஸ்தா கோயிலில் கொடியேற்றம்
X

ஸ்ரீதா்மசாஸ்தா கோயில் கொடியேற்றம் 

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்க கிரீடம், முகம், மாா்பு, கைகள், கால்கள், உடல் கவசம், வாள் ஆகியவை அடங்கிய திருஆபரணப் பெட்டி தமிழக, கேரள போலீஸாா் பாதுகாப்புடன் கேரளத்தின் புனலூா் கருவூலத்திலிருந்து சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. பின்னா், கொடிமரத்திற்கு மகா அபிஷேகம் நடைபெற்றதும், கோயில் மேல்சாந்தி ராஜேஷ் நம்பூதிரி, தந்திரி கண்டரரு மோகனரு ஆகியோா் சிறப்பு பூஜைகள் நடத்தினா். அதைத் தொடா்ந்து மகோத்ஸவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.


Tags

Next Story