நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படும் ஒகேனக்கல் காவிரி ஆறு

போதிய நீர் வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது தமிழக முழுவதும் கோடை காலம் என்பதாலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறண்டு காணப்படுவதாலும் காவேரி ஆற்றில் நீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து தற்போது வினாடிக்கு 200 கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறு வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து நீரின்றி வறண்டு காணப்படும் காவிரி ஆற்றினை கண்டு ஏமாந்து திரும்பி செல்கின்றனர்.

Tags

Next Story