ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
சேலத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பழைய பேருந்து நிலையம் நாராயணன் நகர் பகுதியில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வடமாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலி திருவிழா சேலம் மாநகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் சேலம் பழைய பேருந்து நிலையம் நாராயணன் நகர் பகுதியில் ஹோலி பண்டிகையை வட மாநிலத்தவர்களால் விமர்சையாக கொண்டாடினர்.
இரணியகசிவ் என்ற ராஜாவின் மகன் பக்த பிரகலாதன். இவரை நாராயணன் நாமம் பாடக்கூடாது என இவரது தந்தை சித்திரவதை செய்து வந்ததாகவும் அதற்கு பக்த பிரகலாதன் மறுப்பு தெரிவித்து நாராயணன் நாமம் மட்டுமே பாடி வந்துள்ளார். இவரின் அத்தை ஹோலிக்காவது என்பவர் பிரகலாதனின் தந்தையின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தனது மடியில் உட்கார வைத்து நாராயணன் நாமம் பாடிய போது அப்போது கடுமையான தீ பரவி அவரது அத்தை ஹோலிக்காவது மரணம் அடைந்துள்ளார். ஆனால் அவ்வளவு தீ இருந்தும் பக்த பிரகலாதன் நாராயண நாமம் உச்சரித்ததால் காப்பாற்றப்பட்டார்
இதன் நினைவாக ஹோலி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது வரலாறு. ஹோலி பண்டிகை வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் கொண்டாடும் முக்கிய திருவிழாவாக உள்ளது. குறிப்பாக விரோதிகள் வண்ணப்பொடிகளை தூவி ஒருவருக்கொருவர் ஒருவர் இணைந்து கொள்ளும் நிகழ்வும் இந்த விழாவில் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீரை செலவழிக்காமல் வண்ணப் பொடிகளை மட்டும் தூவி ஹோலி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.