தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு....

தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு....

மதுக்கடை விடுமுறை 

தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், FL2 முதல் FL11 வரை (FL6 தவிர), உரிமத்தலங்கள் மற்றும் எரிசாராயம் (Spirit) நகர்வு செய்யும் உரிமத்தலங்கள், 2003-ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி(2) Tamilnadu Liquor Retail Vending (in Shops and Bars)Rules, 2003 – ன்படி, பொதுத்தேர்தல், 2024 –க்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்றும், மேலும், 21.04.2024 (ஞாயிற்று கிழமை) மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2024 (புதன் கிழமை) மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு மேற்கண்ட தினங்கள் முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மற்றும் பார்கள் FL2 முதல் FL11 வரை (FL6 தவிர), மற்றும் எரிசாராயம் (Spirit) நகர்வு செய்யும் உரிமத்தலங்கள், தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் FL2 முதல் FL11 வரை (FL6 தவிர), மதுபான உரிமத்தலங்கள் மற்றும் எரிசாராயம் (Spirit) நகர்வு செய்யும் உரிமத்தலங்கள் ஆகியவை மீது 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி(2) Tamilnadu Liquor Retail Vending (in Shops and Bars)Rules, 2003 -ன்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story