தொடர் விடுமுறை: குமரி விவேகானந்தர் மண்டபத்தை 34 ஆயிரம் பேர் பார்வை.
விவேகானந்தர் மண்டபம்
கன்னியாகுமரிக்கு விடுமுறை காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 ஆயிரத்து 175 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
வாரத்தின் இறுதி விடுமுறை நாளான கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 100 பேரும், 22-ந்தேதி 9 ஆயிரத்து 925 பேரும், ஆயுத பூஜை தினமான 23-ந்தேதி 10 ஆயிரத்து 100 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையை யொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 6 ஆயிரத்து 50 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அதேபோல கடந்த 4 நாட்களாக வட்டக்கோட்டைக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். என தகவல் வெளியிடப்பட்டுள்ளது