வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை : ஆணையர் உத்தரவு

வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை : ஆணையர் உத்தரவு

பைல் படம் 

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ந் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செ.மின்னல்கொடி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செ.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்.19-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதத்துவ சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்.19-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அவ்விடுமுறை நாளான சம்பளம் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சம்பளமாகவும், பணியன் தன்மைக்கு ஏற்ப அரசால் நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பளத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் என சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த உத்தரவின் பேரில், மதுரை கூடுல் தொழிலாளர் ஆணையர் அ.யாஸ்மின் பேகம் வழிகாட்டுதல்படியும், நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ப.சுமதி ஆலோசனையின் பேரில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட நோடல் அதிகாரி மற்றும் தொழிலாளர் உதவி ஆணையரான (அமலாக்கம்) எனக்கு 93444 47888, தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.ஆறுமுகம் எண்: 9940 22233, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ச.செய்யதலி பாத்திமா எண்: 989433013, ரா.பிரேம்குமார் எண்: 99408 97894, பெ.சூரியன் எண்: 90035 54445, மு.ஜோதிலட்சுமி எண்: 74183 04076 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story