கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

கோடைகால பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்வி குழுமத்தின் கிரிக்கெட் அகாடமி சார்பாக 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் 21 நாட்கள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்வி குழுமத்தின் கிரிக்கெட் அகாடமி சார்பாக 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் 21 நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமில் கிரிக்கெட் பயிற்சியாளர் உதயகுமார் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து,திறம்பட மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி,கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.

இந்த பயிற்சி முகாமிற்கான நிறைவு விழா என்.பி.ஆர் கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.இந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சி பெற்ற 38 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவிற்கு என்.பி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆனந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து,பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags

Next Story