தூய சலேத் அன்னை ஆலய தேர் திருவிழா பெருவிழா
சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டியில் தூயசலேத் அன்னை ஆலய தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கோனேரிபட்டி வழக்கம் தொடர்ந்து இந்த ஆண்டும் திருவிழா நடந்தது. அருட்தந்தை ஜேக்கப் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவின் இறுதி நாளான நேற்று புனித காணிக்கை அன்னை சலேத் மாதா, சம்மனசு, சூசையப்பரை தேரில் அமர்த்தி மலர்களால் அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக வந்தது.தேரை சேலம் மறை மாவட்டம் முதன்மை குரு மைக்கேல்ராஜ்செல்வம் மந்திரித்து தொடங்கி வைத்தார். தேர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. விழாவில் வாணவேடிக்கை நடந்தது. மெழுகுவர்த்தி ஏந்தியும் கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.
Next Story