தூய சவேரியார் ஆலய தேர்பவனி - திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமான தூய சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனியுடன் 10 நாட்கள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலய திருவிழாவிழா கடந்த மாதம் 24-ம் ரோம் நகர் புனித பிரான்சிஸ் டீசேல்ஸ் அபையின் ஆலோசகர் ஜே ஸ்டீபன்அடிகளார்சவேரியார் உருவம் பொறித்தகொடியினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருப்பலியும்மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு ஆலய வளாகம் மின்விளக்குகளாலும் வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினசரி மாலையில் நவநாள் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.
தேர் பவனி: திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ம் நாள் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு விருதுநகர் அருகில் உள்ள ஆர் ஆர் நகர் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பீட்டர் ராய் அடிகளார், பாண்டியன் நகர் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார், எஸ் எப் எஸ் பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார், உதவி பங்கு தந்தை இம்மானுவேல் சதீஷ் அடிகளார், நாலாட்டின்புதூர் பங்கு தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், நாலாட்டின்புதூர் எஸ் எப் எஸ் பள்ளி முதல்வர் ஜெரி லூயிஸ் அடிகளார், பொருளாளர் ஜான் பீட்டர் அடிகளார் ஆகியோர் தலைமையில் ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தூய சவேரியார் தூய லூர்து மாதா, மிக்கேல் அதிதூதர் திருஉருவம் மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், பாண்டியன்நகர், கே.கே.எஸ்.எஸ். என். நகர் வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது. தேர்பவனியின் போது சாலையின் இரு புறங்களிலும் கிறிஸ்தவர்களும் பொதுமக்களும் உப்பு மலர் மாலைகளை காணிக்கையாக வழங்கினர். அவர்களுக்கு உப்பும் மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 10ம் நாளான நாளை ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபரும் விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய பங்குத்தந்தையுமான அருள் ராயன் அடிகளார் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் அதனை தொடர்ந்து திவ்ய நற்கருணை பவனியும் நடைபெறுகிறது. இறுதியில் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லாரன்ஸ் பக்தசபைகள், பீட்சிறுவர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
