புனித வியாகுல மாதா ஆலய தேர் திருவிழா

புனித வியாகுல மாதா ஆலய தேர் திருவிழா

அரசடிபட்டி புனித வியாகுல மாதா ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.


அரசடிபட்டி புனித வியாகுல மாதா ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.
ஆலங்குடி அருகே அரசடிபட்டி புனித வியாகுல மாதா ஆலய தேர் திருவிழா கடந்த10 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த நிலையில் நேற்று காலை குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து விழா, புது நன்மை கூட்டம் நடந்தது. புனித வியகுலமாதா தேவாலயத்தில் உள்ள செபஸ்தியார் மைக்கேல் சமன சு,சவேரியார்,சூசையப்பர் அந்தோணி யார்,பரிசுத்தஆவி வியாகுல மாதா ஆகிய திருவுருவத்தை கிராம முக்கியஸ் தர்கள் எடுத்து வந்து தேரில் அமர்த்தினர். பின்னர் பங்குத்தந்தை அமுல் வில்லியம் மற்றும் அருட் சகோதரிகள் கூட்டு பாடல் திருப்பலியில் கலந்து கொண்டு தேர் 4 வீதிகள் வழியாக வந்தபோது வாணவேடிக்கைகளும் அதிரவைத்த கெட்டி மேளம் முழங்க தேர்ப்பவனி ஊர்வலம் சுற்றி வந்தது. தேர் பவனி விழாவில் அடிசடிபட்டி, பாத்திமா நகர், தவளைப்பள்ளம், மற்றும் சு ற்றுவட்டார பொதுமக்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்பவனி விழா வில் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் கோயில் அருகில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Tags

Next Story