சீர்காழியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை

சீர்காழியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை

ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை

முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு சீர்காழி பேருந்து நிலையம் எதிரே அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு சீர்காழி நகர செயலாளர் வினோத், தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story