கடலூர்: சகஜானந்தா சிலைக்கு மரியாதை

கடலூர்: சகஜானந்தா சிலைக்கு மரியாதை

சுஜானந்தா சிலைக்கு மரியாதை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் கல்வி தந்தை சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் கல்வி தந்தை சுவாமி சகஜானந்தா 134 வது பிறந்த நாளில் அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தேன்மொழி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னதுரை மாலை அணிவித்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் புகழேந்தி கிளை செயலாளர் நீலமேகன் நாகப்பன் தேசிங்கு சாகுல் ஹமீது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story