சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்

திறப்பு விழா 

சேலத்தில் எம்.கே.சி.என்டர்டைன்மெண்ட் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே சேலத்தில் எம்.கே.சி.என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோபோட்டிக் காட்டு விலங்குகளின் அட்டகாசம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.. இந்த கண்காட்சியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ், செந்தில்குமார், பாண்டியராஜன் ஆகியோர் கூறியதாவது:- சேலத்திலேயே பொருட்காட்சியில் ரோபோட்டிக் சிங்கம், புலி, கரடி, மான், ஒட்டகம் மற்றும் யானை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த விலங்குகள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கண்களை கவரும் விதமாக மின்விளக்குகளால் ஒளிர வைத்து சிறப்பாக வடிவமைத்துள்ளனர். மேலும், வீட்டுஉபயோக பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வோர் ஸ்டால், அங்காடி பொருட்களை ஷாப்பிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக விளையாடி மகிழும் வகையில் பிரத்யேகமான ராட்டினங்கள் உள்ளன. பொருட்காட்சியை காண வரும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான உணவு தின்பண்டங்கள் அங்கேயே தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய பல்வேறு வகையான பொருட்கள் அனைத்தும் ரோபோட்டிக் காட்டு விலங்குகள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது, என்றனர்.

Tags

Next Story