ஊர்க்காவல் படை தினவிழா

ஊர்க்காவல் படை தினவிழா
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் ஊர்க்காவல் படை தினவிழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக ஊர்க்காவல் படையில் பணியில் சேர்ந்த 38 ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் ஊர்க்காவல் படை தினவிழா பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி நிறைவு விழாவில் புதியதாக ஊர்க்காவல் படையில் சேர்ந்த , 32 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 38 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புறையாற்றினார்.

மேலும் இந்த பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை துணைக்காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஊர்க்காவல் படை உதவி திருச்சி சரக தளபதி ராஜன், பெரம்பலூர் ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன், ஊர்க்காவல் படை உதவி ஆய்வாளர் செல்வநாயம், தலைமைக் காவலர் சக்திவேல், ஊர்க்காவல்படை எழுத்தர் காவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு விழா நடைபெற்ற பின்னர் ஊர்க்காவல் படை தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் அனைத்து ஊர்க்காவல்படையினருக்கும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

Tags

Next Story