இல்லம் தேடி வரும் இணையதள நகராட்சி சேவை தொடக்கம்
இணைய சேவை
வந்தவாசி நகராட்சி சார்பில் இல்லம் தேடி வரும் இணையதள நகராட்சி சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தி
ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வந்தவாசி நகராட்சி சார்பில் இல்லம் தேடி வரும் இணையதள நகராட்சி சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி மேலாளர் ரவி முன்னிலை வகித்தார். நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சொத்து வரி, தொழில்வரி, கடை வாடகை, காலி மனை வரி, தொழில் உரிமம் மற்றும் குடிநீர்கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்த, இந்த வசதியை தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பொது மக்கள் இணையதள சேவையில் வரிகளை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் வருவாய் ஆய்வாளர் சிவா உதவியாளர் பிச்சாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.