ஹானிமோன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
டாக்டர் ஹானிமோன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பயின்ற சுமார் 170 முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அப்போது முன்னாள் மாணவர்கள் தங்கள் மாணவர் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவுப் படுத்தி பேசினர். பின்னர் தங்கள் வாழ்வில் நடந்த அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் சிறப்புரையாற்றி தொடர்ந்து இன்னும் பல சாதனைகள் நீங்கள் புரிய வேண்டும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அவர்கள் தொடர்ந்து வாழ்வில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக உள்ளது எனவும் அவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்வித்தனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி காலில் விழுந்து வணங்கினர். இதனை தொடர்ந்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் இதில் கல்லூரியின் இணைய தளம் லட்சிணை வெளியிடப்பட்டது. முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் படிப்பின் முக்கியத்துவம், மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சொல்லுவது குறித்தும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பாக நினைவு கேடயம் வழங்கினர் .
இந்த நிகழ்ச்சியில் இவ்விழாவில் கல்லூரி சேர்மன் டாக்டர் எஸ். இராஜமாணிக்கம், முதல்வர் டாக்டர் பிந்து, முன்னாள் ஆசிரியர்கள் டாக்டர் சந்திரன் டாக்டர் முத்துராமலிங்கம், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் சரவணன், டாக்டர் ஓல்கா சரவணன், டாக்டர் ஜோதிலட்சுமி, டாக்டர் நந்தகுமார் உட்பட முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.