பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எம்.பி ரவீந்திரநாத் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். கடந்த அக்.30 தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இயலாததால் நேற்று பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்,தேவர் வீட்டில் உள்ள பூஜை அறையில் தியானம் செய்து, புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாளை சந்தித்து நலம் விசாரித்தார். பழனி, தங்கவேலு, ஆகியோர் வரவேற்றார்கள், அவரது ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் மதுரை இராஜ்மோகன்,முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மூக்கையா,ஓ.பி.எஸ்., ஆதரவு ஒன்றிய செயலாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராமலிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
Next Story