சிவகாசி அருகே கோர விபத்து. ஓட்டுநர் காயத்துடன் மீட்பு....

சிவகாசி அருகே கோர விபத்து. ஓட்டுநர் காயத்துடன் மீட்பு....
 விபத்து
சிவகாசி அருகே கோர விபத்து. ஓட்டுநர் காயத்துடன் மீட்கப்பட்டார்.

சிவகாசி அருகே நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஓட்டுனருக்கு பலத்த காயத்துடன் மீட்பு. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்தில் ஓட்டுனருக்கு பலத்த காயத்துடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசி அருகே உள்ள அட்டை கம்பெனிக்கு மூலப் பொருட்களை ஏற்றி சென்று உள்ளார்.

இந்த நிலையில் விஜய் ஒட்டி வந்த லாரி விருதுநகர் மாவட்டம்,சிவகாசி சந்திப்பில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் ஓட்டுநர் விஜய் ஓட்டி வந்த லாரியின் முன்புறம் அதிகளவு சேதம் ஏற்பட்டதால் ஓட்டுநர் விஜயின் கால் லாரியின் உள்ளே சிக்கியதை அடுத்து சாத்தூர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் லாரியின் உள்ளே சிக்கி இருந்த ஓட்டுநரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story