"அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை"

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

அஷ்டபுஜ கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குதிரை குட்டிக்கு, ரோகிணி என்ற பெயர் சூட்டி உள்ளனர்.


அஷ்டபுஜ கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குதிரை குட்டிக்கு, ரோகிணி என்ற பெயர் சூட்டி உள்ளனர்.
காஞ்சிபுரத்தில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணி செய்யப்பட்டு கடந்த பிப்., மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில் இக்கோவிலில் உள்ள குதிரை நேற்று, குட்டியை ஈன்றது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான பொறியாளர் ஜெயபிரகாஷ் என்பவர், கடந்த பிப்., 23ம் தேதி, அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு, பெண் குதிரை ஒன்றை தானமாக வழங்கினார். அந்த குதிரைக்கு புஷ்பா என, பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் புஷ்பா குதிரை நேற்று, அதிகாலை 2:00 மணிக்கு குட்டியை ஈன்றது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தாய் குதிரையும், குட்டியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குதிரை குட்டிக்கு, ரோகிணி என்ற பெயர் சூட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story