பூந்தமல்லியில் குதிரைகள் தொல்லை- பொதுமக்கள் அதிருப்தி
பூந்தமல்லியில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பூந்தமல்லியில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பூந்தமல்லி நகராட்சியில், 21 வார்டில் 60,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக, குதிரைகள் சுற்றித் திரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தனியார் நபர்கள், பூந்தமல்லியில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளை குடியிருப்புகளில் சுதந்திரமாக உலவ விட்டு வளர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இரண்டு குதிரைகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை, 20க்கும் மேல் அதிகரித்து விட்டது. மற்ற ஊர்களில் மாடுகள் தொல்லையாக இருக்கும். பூந்தமல்லியில் குதிரைகள் தொல்லையாக உள்ளன. குடியிருப்பு பகுதியில் சுற்றும் குதிரைகள், திடீரென சாலையைக் கடக்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தில் சுற்றும் குதிரைகள், கழுதைகள் சில நேரத்தில் மாணவர்களை கடிப்பதும், உதைப்பதும் நடக்கிறது. சில சமயம், சாலையில் நடந்து செல்வோரையும் முட்ட வருகின்றன. எனவே, குடியிருப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள குதிரைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story