ராணுவ வீரரின் குடும்பத்தை கடத்திய மருத்துவமனை ஊழியர் கைது
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரரான சமதர்மன் (46) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் (39) என்பவரை கைது செய்து, ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கும் சம்பவத்தின் பிண்ணனியில் நடந்திருக்க கூடிய சம்பவங்கள் தான் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மடதள்ளி கிராமத்தை சேர்ந்த தான் அதியமான்,தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை குறிவைத்து மெல்ல பேச்சு கொடுத்து நோயாளி யார், என்ன உறவுமுறை வேண்டும் என முதலில் விசாரித்து, தான் இந்த நேரத்தில் பணியில் இருப்பேன் எதாவது மருத்துவ உதவி உள்ளிட்ட உதவி தேவைபட்டால் தன்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி தனது செல்போன் எண்ணை பெண்களுக்கு கொடுத்து தந்திரமாக பேசி அரசுத்துறைகள், நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி நம்ப வைத்து லட்ச கணக்கான ரூபாய் பணத்தை பறித்தும், நம்பி ஏமாறும் பெண்களை தனது உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள பணியை செய்வது அதியமானின் தனி ஸ்டைலாக இருந்திருக்கிறது இப்படி வீழ்த்தப்பட்டவர் தான் இராணுவ வீரரின் மனைவி.
தன்னை செல்போனில் தொடர்பு கொள்ளும் பெண்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தும் அதியமான், பின்னர் பெண்களிடம் செல்போனில் அடிக்கடி பேச்சு கொடுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்டவைகளை பொய்யாக கூறி நம்பவைத்தும், தனக்கு அரசு உயர் அதிகாரிகள், உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களை பலரை தெரியும் யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் கூறுங்கள், தங்களுக்கும் நல்ல கமிசன் கிடைக்கும் என ஆசை வார்த்தை க்கூறி நம்பவைத்து நெருக்கத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பதோடு மட்டுமல்லாமல் தனது உடல் இச்சைக்கும் பல பெண்களை பலியாக்கியிருக்கின்ற சம்பவம் காவல்துறையினரின் விசாரணையி்ல் தெரிய வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..