ஓசூர் மலை கோயில் பங்குனி உத்திர திருவிழா

ஓசூர் மலை கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலைக்கோயிலில் அமைந்துள்ள ஶ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

ஓசூர் மாநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோயில் என்று அழைக்கப்படும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து மலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளான அம்பாளும் சிவபெருமானும் மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலித்தனர். நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிறப்பு காட்சிகளுடன் அருள் பாலித்த அம்பாளும் சிவபெருமானும், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ், மாநகர மேயர் எஸ் ஏ சத்யா உள்ளிட்ட பலரும் திருத்தேரில் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அப்போது ஏராளமான பக்தர்கள் திருத்தேரின் மீது உப்பு மிளகாய் வாழைப்பழம் ஆகியவற்றை நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக திருத்தேரின் மீது வீசி எரிந்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து நித்திஷ் ஜெயின் மங்கல் சந்த் ராக்கி குருப் நிறுவனர் மற்றும் இயக்குனர் அவர்கள் சார்பில் இலவசமாக வெஜிடபுள் பிரியாணி, தக்காளி சாதம்,

புதினா சாதம் மற்றும் கேசரி உள்ளிட்ட பல்வேறு வகையாக உணவுகளுடன் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது, திருவிழா பகுதி சுற்றிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து 300 மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story