தலைவருக்கு இணையாக அமர்ந்த துணைத்தலைவர் - கவுன்சிலர்கள் தர்ணா
தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமையில் நடந்தது. அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் பட்டியலின சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் ஒன்றியக்குழு துணை தலைவர் நாராயணசாமி, தலைவர் போன்று தான் அதிகார தோரணையில் செயல்படுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
16 கவுன்சிலர்கள் கொண்ட ஒன்றியக்குழுவில் 8 அதிமுக, 7 திமுக, 1 தேமுதிக உறுப்பினர்கள் உள்ளநிலையில் தேமுதிக ஆதரவுடன் அதிமுக தலைவர் பதவியை கைப்பற்றியது ஒவ்வொரு ஒன்றியக்குழு கூட்டத்திலும் ஒன்றிய சேர்மனுக்கும் தனக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகளை போட வைத்து, சேர்மனை பேச விடாமல் அவர் மட்டுமே பேசி கூட்டத்தை முடித்துவிடுவார்..
இதற்கு அதிமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நான் கர்நாடகா அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவன், கல்வி அறிவில் உயர்ந்தவன் என தன்னை காட்டிக்கொள்வதால் வயதில் மூத்தவர் என அனைவரும் அமைதி காத்துவந்தனர் இன்று நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் சேர்மனுக்கு இணையாக துணை சேர்மன் நாராயண சாமி அமர்ந்ததால் கூட்டத்தில் பங்கேற்ற 11 கவுன்சிலர்கள், தலைவர் இல்லாத பட்சத்தில் மட்டுமே தலைவர் இருக்கையில் பொறுப்பு தலைவராக இருந்து நடத்த வேண்டுமென தவிர, சேர்மன் சசி வெங்கடசாமி இருந்த போதும் இவருக்கு இணையான நாற்காலியில் அமர்ந்து வந்தார்.
இதனால் திமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் துணைத் தலைவர் நாராயணசாமி தலைவர் போல் செயல்படுவதாகவும் பிடிஓ, ஒன்றிய குழு தலைவர் அமரும் வரிசையில் துணைத் தலைவர் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர் பின்பு ஒன்றிய குழு தலைவர் வேண்டுகோளின்படி திமுகவினர் கூட்டத்தில் பங்கேற்றனர் இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இதேபோல் பிடிஓ விடமும் ஒன்றிய குழு துணை தலைவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.. ஒருக்கட்டத்தில் அடிக்கும் தோரணையில் பேசினார் இதனால் தொடர்ந்து மன்ற கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது