மயிலாரை முன்னிட்டு சூடு பிடித்த ஆடு விற்பனை

மயிலாரை பண்டிகையை முன்னிட்டு கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் ரூ. 7.5 லட்சம் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் வாரம் தோறும் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. மயிலார் பண்டிகை என்பதால் ஆடுகளின் வரத்து அதிகம் காணப்பட்டது இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. ஜமுனாபாரி ஆடுகள், செம்மறி ஆடுகள், சேலம் கருப்பாடுகள், பல்லாடுகள், நெல்லூர்கிடா என பல வகை ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர் பெரிய ஆடுகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை, குட்டி ஆடுகள் 3500 முதல் 5000 வரை என மொத்தம் சுமார் 7.5 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story