சிவகாசியில் ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திகுத்து
சிவகாசி அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் ஹோட்டல் உரிமையாளரை இருவர் கத்தியால் குத்தும் வீடியோ சமூக வலையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகாசி அருகே மாரனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் மாரனேரி-ஆலங்குளம் சாலையில் ஜெ.ஜெ ஹோட்டல் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். ஜெகநாதன் மகன்கள் கரிமால், வாசுதேவன்,ரஜேஷ்கண்ணன் ஆகியோர் ஹோட்டலை நிர்வகித்து வருகின்றனர்.
ஏ.துலக்கப்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன்கள் பொன்ஈஸ்வரன், பாண்டீஸ்வன் ஆகிய இருவரும் இரவு ஹோட்டலுக்கு பார்சல் வாங்க சென்றனர்.அவர்கள் ஹோட்டல் முன் நின்றிருந்த போது ராஜேஸ்கண்ணன் ஹோட்டலுக்குள் செல்லும் போது தெரியாமல் அவர்கள் மீது இடித்து சென்றார்.
அப்போது ராஜேஷ்கண்ணனுடன் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டு சென்று,மீண்டும் சிறிது நேரம் கழித்து பொன்ஈஸ்வரன், பாண்டீஸ்வரன் இருவரும் திரும்பி வந்து ராஜேஷ்கண்ணனை கத்தியால் குத்தினர்.
அவர்களை பிடிக்க சென்ற ஹோட்டல் ஊழியர்களையும்,பொது மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவோம் என இருவரும் மிரட்டி தப்பி சென்றனர்.ஹோட்டல் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.