வீடு புகுந்து நகை திருட்டு : இருவரை கைது செய்த போலீஸ்!
வேலூர் அருகே வீடு புகுந்து நகை திருடு போன சம்பவத்தில் போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் அருகே வீடு புகுந்து நகை திருடு போன சம்பவத்தில் போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய திருடர்களை பிடிக்க எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தாலுக்கா காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த திருப்பூரை சேர்ந்த மாரிமுத்து (43) மற்றும் நாகராஜ் (34) ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இருவரையும் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story