வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த கிரீன் குடும்பத்தோடு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, மர்மநபர்கள் கதவை உடைத்து, பணம், நகையை திருடிச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிரீன் (54). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது குடும்பத்தோடு இங்கு வசித்து வருகிறார். நேற்று முன் தினம் கிரீன் குடும்பத்தோடு இரவு 11 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனை கலந்து கொள்ள சென்றார். பிரார்த்தனை முடிந்து இரவு 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கத உடைக்கப்பட்டிருந்தது. இதை உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 35 பவுன் நகை மற்றும் 55, ஆயிரம் ருபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கிரீன் ஆலயத்திற்கு செல்வதை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
Next Story