கனமழையால் வீடு சேதம் - எம்எல்ஏ ஆய்வு
எம்.எல்.ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கட்டவரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி வயது (50) நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரவு பலத்த கன மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டின் ஒரு பக்க மண் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. இதனால் அச்சமடைந்து கூச்சலிட்டார் .பின்னர் சுவர் இடிந்த சத்தத்தை கண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பொன்னுசாமி குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர், இதுகுறித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மழையால் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட முதியவர் பொன்னுசாமிக்கு தனது சொந்த பணத்தில் நிதி உதவி வழங்கினார். தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அரசு வீடு உங்களுக்கு வழங்கப்படும் அதுவரை பத்திரமாக வேறு மாற்று இடத்தில் தங்கிக் கொள்ளுமாறு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, துணி போன்றவைகளை வழங்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுத்து மற்ற உதவிகள் வேண்டுமென்றாலும் எந்த நேரத்திலும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் செய்வதற்கு தயாராக உள்ளேன் என்று சரவணன், எம்எல்ஏ ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், பஞ்சாயத்து தலைவர் அயில், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பன்னீர்செல்வம், உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.