உசிலை செம்பட்டியில் வீட்டை இடிப்பதாக அறிவிப்பு பலகை; மக்கள் அதிர்ச்சி

உசிலை செம்பட்டியில் வீட்டை இடிப்பதாக அறிவிப்பு பலகை; மக்கள் அதிர்ச்சி

 உசிலை செம்பட்டியில் வீட்டை இடிப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உசிலை செம்பட்டியில் வீட்டை இடிப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே செம்பட்டியில் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பட்டா மனையிடத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும் நிலையில் தற்போது அரசு அதிகாரிகள் வீட்டை இடிப்பதாக அறிவிப்பு பலகை வைத்ததால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செம்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்காக கடந்த 2000 முதல் அப்போதைய திமுக அரசு மூன்று கட்டங்களாக சுமார் 148 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளது.ஆதிராவிட மக்கள் குடிசை போட்டு வசித்த சூழலில் கடந்த 2018 முதல் ஒவ்வொருவராக வீடு கட்டி சுமார் 98க்கும் மேற்ப்பட்டவர்கள் வீடு கட்டி வீட்டு வரி ரசீதும் பெற்றுள்ளனர்.மேலும் செம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆதிதிராவிட காலணியான முல்லை நகருக்கு குடிநீர் தொட்டி மற்றும் மண் சாலை வசதி ஏற்ப்படுத்திக் கொடுத்தாகக் கூறப்படுகின்றது.

அனைத்து ஆதிதிராவிட மக்களும் இலவச மின்சாரத்திற்கு மின்வாரியத்திடம் விண்ணப்பித்துள்ள சூழலில் மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது உசிலம்பட்டி ஆதிதிராவிடர் தனி வட்டாச்சியர் சார்பில் இங்கு வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு நோட்டீஸ் வீடு வீடாக ஒட்டப்பட்டுள்ளது.அதில் வீடு கட்டி யாரும் குடிவராததால் 148 பேருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா கடந்த 2015ல் இலவச பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் இவ்விடத்தில் சட்ட விரோதமாக வீடோ குடிசையோ கட்டியிருந்தால் வரும் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இதே எச்சரிக்கை பலகையை ஊழியர்கள் முல்லை நகரில் ஊண்ட வந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரத்தான இலவச வீட்டுமனைப் பட்டா இடத்திற்கு முல்லை நகர் எனப் பெயர் வைத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டு வசதி ரசீது போடப்பட்டு சாலை வசதியும் குடிநீர் வசதியும் செய்து கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.ஆதிதிராவிட மக்களுக்கு கலைஞரின் திமுக அரசு வழங்கிய இலவச வீட்டு பட்டா இடத்தை கலைஞரின் மகன் ஸ்டாலினின் திமுக அரசே பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story