திருப்பூரில் இல்லம்தோறும் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி

திருப்பூரில் இல்லம்தோறும் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி

திண்ணை பிரச்சாரம்

திருப்பூரில் திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி தலைமையில் இளந்தோறும் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி மு க சார்பில் தி மு க அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்னும் பரப்பரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 39வது வார்டு ஆண்டிபாளையம் முல்லை நகரில் இல்லம் தோறும் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் தி மு க கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று இரண்டு ஆண்டு சாதனை விளக்கங்களை பொதுமக்களிடம் கூறி துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags

Next Story