அரையடி பள்ளத்தில் புதைந்த வீடுகள்

அரையடி பள்ளத்தில் புதைந்த வீடுகள்

காஞ்சிபுரத்தில் புதிதாக சிமென்ட் சாலை பணி நடந்து வருவதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அரை அடி வரை பள்ளத்தில் புதைந்தன.


காஞ்சிபுரத்தில் புதிதாக சிமென்ட் சாலை பணி நடந்து வருவதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அரை அடி வரை பள்ளத்தில் புதைந்தன.
காஞ்சிபுரம், அப்பாராவ் தெருவில், மாநகராட்சி சார்பில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக, முதற்கட்டமாக ஜல்லிக்கற்கள் சாலையில் பரப்பி விடப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளபடி, பழைய சாலையை அகற்றாமல், அதன் மேலேயே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, புதிதாக சிமென்ட் சாலை பணி நடந்து வருவதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அரை அடி வரை பள்ளத்தில் சென்றுள்ளன. இதனால், மழைக்காலத்தில், வீடுகளுக்குள் மழைநீர் புகும் சூழல் உள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம்மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில், பழைய சாலையை அகற்றாமல், புதிய சிமென்ட் சாலை அமைப்பது குறித்து நாளை காலை, உதவி பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story