மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு
மாற்றுத்திறனாளிகள்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றிய, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளைத் தலைவர், செயலாளர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சொந்த இடமில்லாத, வீடு இல்லாமல் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு, அரசால் கட்டிக் கொடுக்கப்படும் குடிசை மாற்று வாரியத்தில், வீடு முறையாக ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். உதவித்தொகைக்காக மனு கொடுத்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், கருப்பூர் கிராமத்தில், சங்கத்தின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவோணம் திருவோணம் ஒன்றியம் சோழகன்கரை கிளைக் கூட்டம், கிளைத் தலைவர் பாப்பம்மாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா கலந்து கொண்டனர். இதில், "மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய கூட்டுறவு வங்கிகளில் தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். வீடற்றவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story