வீட்டுமனை பட்டா முறைகேடு - மாற்றுத்திறனாளி தர்ணா

வீட்டுமனை பட்டா முறைகேடு - மாற்றுத்திறனாளி தர்ணா

கனகராஜ் 

வீட்டுமனைப்பட்டாவை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனையபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் மகன் கனகராஜ் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார். அப்போது வீட்டுமனை பட்டா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தான் இதுவரை மனு கொடுத்த ஆவணங்களையும், தனது இடத்திற்கான ஆவணங்க ளின் புகைப்படத்தையும் அடுக்கி வைத்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது:- நான் பனையபுரம் கிராமத்தில் நிரந்தரமாக வீடு கட்டி வசித்து வருகிறேன். எனது உடன்பிறந்த அண்ணன் சுப்பிரமணி கடந்த 1995-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு எனது அண்ணன் மனைவி மீனாட்சி, அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது ஒரு பத்திரத்தில் எனக்கும் எனது கணவர் குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் எனது அண்ணன் சுப்பிரமணிக்கு மீனாட்சி வாரிசு என்று சான்றிதழ் தவறாக கொடுத்து அதன் மூலம் தனிநபர் ஒருவர், எங்களுக்குரிய வீட்டுமனைப்பட்டாவை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். இதுபற்றி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். உடனே அவரை போலீசார் சமாதானப்படுத்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story