வீட்டுமனை பட்டா அளவீடு: வட்டாட்சியரிடம் மனு

வீட்டுமனை பட்டா அளவீடு: வட்டாட்சியரிடம் மனு
வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள் 
மதுராந்தகம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மாம்பாக்கம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளை அளவீடு செய்து தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில், 124 குடும்பங்களின் வீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. அதற்கு மாற்றாக, மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் பகுதியில், தலா 1 சென்ட் வீதம், 124 வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அவற்றை அளவீடு செய்து, ஒவ்வொரு மனையாக பிரித்து, மனை பிரிவிற்கு செல்வதற்கான வழி அமைத்து தரும்படி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. ஆகையால், நேற்று முன்தினம் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ராஜேஷை சந்தித்து, பட்டாவை அளவீடு செய்து மனையாக வழங்க கோரி, 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story